வறண்ட சருமத்திற்கு :
இந்த வறண்ட சருமம் உள்ளவங்களுக்கு எல்லாக் காலங்களும் பிரச்சனைதான். குளித்ததும் எண்ணை அல்லது மாய்ச்சுரைசர் உபயோகப்படுத்தியே ஆகவேண்டும். இனிமே அது பற்றிய கவலை வேண்டாம்! நீங்க குளிக்கிற தண்ணியில பேக்கிங் சோடா கலந்து குளிச்சுப் பாருங்க. பேக்கிங் சோடா ஒரு நல்ல மாய்ச்சுரைசர். அல்லது ரோஸ் ஆயில் ஒரு பத்து சொட்டுகள் கலந்து குளிக்கலாம். இந்த ரோஸ் ஆயில் நம் தோலிற்குத் தேவையான தண்ணீரைக் காயவிடாமல் ஈரப்பதத்துடனே வைத்திருக்க உதவுகிறது. குளித்ததும் நாம் போட்டுக் கொள்கிற வாசனைத் திரவியம் எல்லாம் தேவையில்லை. இதுவே ஒரு சென்ட்தானே.
எண்ணைப் பசை சருமத்திற்கு :
உங்க வீட்டுல ஆரஞ்சுப் பழம், திராட்சைப் பழம் வாங்கி வைச்சது லேசா அழுகிடுச்சா? தூக்கிப் போட்றாதீங்க! குளிக்கிற தண்ணில சிட்ரிக் ஆசிட் அதிகமா உள்ள பழங்களான எலுமிச்சை , ஆரஞ்சு, திராட்சை இவற்றைக் கலந்து குளிச்சுப் பாருங்க. இந்த சிட்ரிக் ஆசிட் பாக்டீரியாக்களைக் கொல்வதோடு, அழுக்கை அகற்றி, தோலில் உள்ள தேவைக்கு அதிகமான எண்ணையையும் உறிஞ்சிக் கொள்கிறது. நல்ல நறுமணமாகவும் இருக்கும். அதனால இனிமே எண்ணைப் பசை சருமத்துக்கு குட்பை சொல்லிட வேண்டியதுதானே!
இறந்த செல்களை அகற்ற :
ஒரு சின்ன பாக்கெட் பால் பௌடரை குளிக்கிற தண்ணீரில் கலந்து குளிக்கவும். பாலில் உள்ள லாக்டிக் ஆசிட் தோலில் உள்ள தேவையற்ற இறந்த செல்களை அகற்றி உங்கள் சருமத்தைக் குழந்தையின் தோலைப் போல மிருதுவாக மாற்றிவிடும்.
உடல் அசௌகரியங்களிலிருந்து விடுபட :
2 டீஸ்பூன் இஞ்சித்தூள் மற்றும் 2 டீஸ்பூன் வறுத்த கடுகு ஆகியவற்றைக் குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், பெண்களுக்கு பீரியட்ஸ் நேரங்களில் வரும் அசௌகரியங்களிலிருந்து விடுபட்டு ஃப்ரெஷ்ஷாக உணரலாம்.
சுகமான உறக்கத்திற்கு :
பல பேர் இதுக்காகத்தான் ரொம்பக் கஷ்டப்படறோம் இல்லையா? கவலைய விடுங்க. படுக்கறதுக்கு முன்னால உங்க பாத்டப்ல ஒரு டீஸ்பூன் லாவண்டர் ஆயிலை கலந்து குளிச்சுட்டுப் படுங்க. மனதை மயக்கும் லாவண்டரின் நறுமணம் உங்களை அழகா தாலாட்டித் தூங்க வைக்கும்.
நச்சுத்தன்மையை அகற்ற :
நாம் வெளியில் செல்லும்போது கண்ணுக்குத் தெரியாத நச்சுத்தன்மை வாய்ந்த எத்தனையோ தூசு கள்கள் நம் சருமத்தில் ஒட்டிக் கொள்கின்றன. இதனால் பல சரும வியாதிகள் வந்துவிடுகின்றன. இதைத் தவிர்க்க, நல்ல வெதுவெதுப்பான நீரில் 250 கிராம் கடல் உப்பு, 500 கிராம் பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கலந்து தண்ணீர் நன்கு குளிர்ச்சியாகும் வரை ஊற வைக்கவும். பிறகு குளிக்கவும். இந்தக் குளியல் உங்கள் சருமத்தை மிருதுவாக்குவதோடு எல்லாவிதமான நச்சுத் துகள்களையும் நம் தோலிலிருந்து நீக்கிவிடுகிறது. தினமும் இந்த மாதிரி குளிக்க முடியாவிட்டாலும் கிடைக்கும் விடுமுறை நாட்களில் குளிச்சு ரிலாக்ஸா இருங்க.
No comments:
Post a Comment