என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

பொடுகை போக்க வேண்டுமா

ஆன்டி செப்டிக் தன்மை நிரம்பிய மூலிகைகளால் உருவான ஆயுர்வேத எண்ணெயை (அதில் வேப்பிலை, வெந்தயம், துளசி ஆகியவை கலந்தது) முடியின் வேரில் மென்மையாக அழுத்தித் தடவவும்.

அதே ஆன்டிசெப்டிக் எண்ணெயை முழுத் தலையிலும் சிராகத் தடவவும்.

வென்னீரில் டவலை ஊற வைத்து, பிறகு நீரைப் பிழிந்து விடவும். சிராக நீராவி முடிகளுக்குள் செல்லுமாறு அந்த டவலை தலையில் கட்டவும்.

5லிருந்து 10 நிமிடம் வரை அதை உலர விடவும்.                                                      பொடுகு அகற்றுவதற்காக விசேஷமாக தயாரிக்கப்படும் ஒரு கலவை:

ஒரு கப் மருதாணியில் நெல்லிக்காய், சியக்காய், ஒரு தேக்கரண்டி, வெந்தயம், வேப்பிலை, துளசி அரை தேக்கரண்டி எல்லாவற்றையும் பொடியாக கலக்கவும், எல்லாவற்றையும் தயிரில் கலந்து அல்லது பாதி எலுமிச்சை துண்டின் சாறுடன் கலந்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இதை தலை முழுக்கத் தடவி ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும். இப்பொழுது இந்த ஆயுர்வேத ஷாம்புவால் தலையை கழுவிக் கொள்ளவும்.
இதை வாரத்திற்கு ஒரு முறை என 3 மாதங்கள் வரை தடவவும். இதனால் நிச்சயமாக பொடுகு விலகும். இதற்குப் பிறகும் தலையில் பொடுகு ஏற்பட்டால் உங்கள் உடல் கோளாறுதான் இதற்குக் காரணம். எனவே உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...