என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாக்க சில டிப்ஸ்


அசைவ உணவு வகைகளை பிரிட்ஜிக்குள் வைக்கும் போது
அவற்றை தனியாக கவரில் போட்டு வையுங்கள். இத்துடன்
எலுமிச்சம் பழத்தை துண்டுகளாக்கி பிரிட்ஜில்  வைப்பதன்
மூலம் கெட்ட வாடையைத் தவிர்க்கலாம்.


குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகளை வைக்கும் போது
அவைகளைத் தனித்தனியே பிளாஸ்டிக் கவர்களில் வைக்க
வேண்டும். எல்லாக் காய்கறிகளும் ஒரே பையில் வைக்கக்
கூடாது.

நீரில் நனைத்த காகிதத்தினால் கீரைகளைச் சுற்றி வைத்தால்
சீக்கிரம் வாடாமல் இருக்கும்.

இஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மண்ணில்
புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும்
போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.

கோடையில் காய்கறிகள் சீக்கிரமாக காய்ந்து விடும். ஒரு
புதிய மண்பானையில் காய்கறிகளைப் போட்டுக் பானையை
ஈரமுள்ள மணல் மேல் வைத்தால் இரண்டொரு நாள் வரை
காய்கறிகள் புகிதாகவே இருக்கும்.

பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க
பாகற்காய்களை இரண்டிரண்டடாக நறுக்கி வைத்து
விடுங்கள்.

கிழங்குகளை மூடி வைக்கக்கூடாது. காற்றாடப் பரப்பி
வைக்க வேண்டும். கிழங்கை உப்புக் கரைத்த நீரில்
பதினைந்து நிமிஷங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு
அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.

கூடையில் காய்களைப் போட்டுக் ஈரத்துணியினால் மூடி
வைத்திருந்தால் பல நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.

முதல் நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை
வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை
ஈரத்துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை
நன்றாகக் கழுவிவிட்டு அந்த பாத்திரத்திற்குள் பூவை
வைத்து மூடி வையுங்கள்.பூ வாடாமல் வதங்காமல் நீங்கள்
வைத்த மாதிரியே இருக்கும்

பச்சைப் பட்டாணி மலிவாகக் கிடைக்கும் போது அதை
உரித்து எடுத்து, பிளாஸ்டிக் பையில் போட்டு அதன்
வாயைக் நன்கு இறுக்க கட்டி குளிர்சாதனப் பெட்டியில்
வைத்தால் பல மாதங்கள் வரை பச்சை மாறாமல்
இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...